ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வேலை வாய்ப்பு முகாம்கள்: பாஜக வேட்பாளர் உறுதி
வாக்கு சேகரிப்பின் போது பேசிய பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன்
பாரதிய ஜனதா கட்சியின் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வேட்பாளர் அஸ்வத்தாமன் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் நிர்வாகிகள் தொண்டர்களுடன் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அமைந்துள்ள திருப்பத்தூர், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் ,ஜோலார்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் தீவிரவாத்து சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், இந்த திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஆகிய எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்ற எனக்கு நீங்கள் வாய்ப்பு வழங்கினாள் திருவண்ணாமலையிலிருந்து திருப்பத்தூர் நகருக்கு புதிய ரயில் பாதை அமைத்து ரயில் பயண வசதியை செய்து தருவேன்.
அதேபோல் திருப்பத்தூரில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் வரை புதிய ரயில் பாதை அமைத்து தரப்படும்.
மேலும் இத்தொகுதியில் தொழிற்கல்வி மற்றும் பட்டப் படிப்பு படித்த இளைய சமுதாயத்தினர் பயன்பெறும் வகையில் புதிய தொழிற்சாலை அமைத்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரப்படும்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் சீரமைத்து தரப்படும்.
நகர மக்களுக்கும் கிராம மக்களுக்கும் சுகாதாரமான குடிநீர் தங்கு தடை இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் மாதம் ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
திருவண்ணாமலையில் UDAN திட்டத்தின் மூலம் விமான நிலையம் அமைத்து தர முயற்சிகள் மேற்கொண்டு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.
திருவண்ணாமலை பாரத பிரதமரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்படும்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் வளாகமும் கிரிவலம் பாதையும் உலக தரத்தில் மேம்படுத்தப்படும். அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக உதவி மையங்கள் அமைத்து தரப்படும்.
தென்பெண்ணை ஆறு பாலாறு இணைப்பு திட்டம் விரைவுபடுத்தி உடனடியாக விவசாயிகள் பயன்படும் வகையில் அமைத்து தரப்படும்
ஜவ்வாது மலைப்பகுதிகளில் இருக்கும் பழங்குடி கிராம மாணவர்களுக்கு இலவச அறிவியல் பயிற்சி அளிப்பதற்காக இலவச ரோபோடிக் பயிற்சி மையம் தொடங்கப்படும்
ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷனில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வழிவகை செய்வேன்.
பெண் தொழில் முனைவோர்களை உருவாக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். பாரத பிரதமரின் வங்கிக் கடன் திட்டங்கள் மூலம் மேலும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான எல்லா வித உதவிகளும் செய்யப்படும் என பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் பேசினார்.
இந்த பிரச்சாரக் கூட்டங்களில் பாஜகத் தொண்டர்கள் நிர்வாகிகள் கூட்டணி கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu