சமரச மைய நாளை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம்

சமரச மைய நாளை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம்
X
சமரச மைய நாளை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சமரச மையம் சார்பில் சமரச மைய நாளை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் புத்தகங்கள் விற்பனை அரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் திருவண்ணாமலை ஐ.டி.ஐ. மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி மற்றும் நீதிபதிகள், பார் அசோசியேஷன், வழக்கறிஞர் சங்கம், அட்வகேட் அசோசியேஷன் தலைவர்கள், செயலாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை-போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமியை கற்பழித்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா நெடுங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 48), தொழிலாளி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் 16-ந் தேதி 16 வயதுடைய சிறுமியை கடத்தி கற்பழித்து உள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் இது குறித்து போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்தனை கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கற்பழித்த ஆனந்தனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் பரிந்துரை செய்தார். பின்னர் ஆனந்தனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!