மனைவியுடன் 'லடாய்' - கலெக்டர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர்

மனைவியுடன் லடாய் - கலெக்டர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்ற வாலிபர்
X

தீக்குளிக்க முயன்ற வாலிபர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாலிபர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை சிவசக்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 33), ஏ.சி. மெக்கானிக். இவர் அவரது 5 வயது மகனுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதைக் கண்ட போலீசார், அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாகவும், அதிகாரிகள் சமரசம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!