/* */

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.12 கோடி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.3.12 கோடி ரொக்கம், காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 3.12  கோடி
X

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் பக்தர்கள்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.3.12 கோடி ரொக்கம், 340 கிராம் தங்கம், 1,895 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனர்.

காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 7-வது நாளான நவம்பர் 23ஆம் தேதி அன்று மகா தேரோட்டம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 26 ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

அன்றைய தினம் சுமாா் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் கிரிவலம் வந்து, சென்றனா்.

தொடர்ந்து 11 நாட்கள் தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வந்தது. மலை உச்சியில் காட்சி தரும் மகா தீபம் நேற்று முன்தினம் 6-ம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து நேற்று காலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

தீபக் கொப்பரையை எடுத்து வரும் வழியிலும் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் கொப்பரையை வழிபட்டனர்.

கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் கோயில் ஊழியர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.

தொடர்ந்து வருகிற 27-ந் தேதி கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது மகா தீப மை (தீப சுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன் பின்னர் மகா தீப மை அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது.

உண்டியல் காணிக்கை

இந்த நிலையில், கோயில் இணை ஆணையா் ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் ஜீவானந்தம், அறங்காவலா்கள் மீனாட்சி சுந்தரம், ராஜாராம், கோமதி குணசேகரன், பெருமாள் ஆகியோா் மேற்பாா்வையில்

100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், பக்தா்கள் நேற்று வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் ரூபாய் 3.12 கோடியை பணமாக செலுத்தியுள்ளனர். மேலும் 340 கிராம் தங்கம், 1,895 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Updated On: 8 Dec 2023 12:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க