திருவண்ணாமலையில் அண்ணா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு
மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த துணிச்சலாக செயல்களை செய்தவர்கள் அண்ணா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்.
விலை மதிப்பில்லா மனித உயிர்களைக் காத்தல் மற்றும் பொது சொத்துக்களை காப்பாற்றுதல் போன்ற துணிச்சலான செயல்களைச் செய்த நபர்களுக்கு அண்ணா வீரப்பதக்கம் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்த பாதகத்தை பெற தகுதியுடையவர்கள் ஆவர். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உடைய இத்தகைய சேவை புரிந்து அவர்களை கௌரவிக்கும் விதத்திலும் ஆபத்துக்காலத்தில் உதவிகள் புரிவதை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு 3 விருதுகளும் அரசு ஊழியர்களுக்கு 3 விருதுகளும் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கருத்துக்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.awards.tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விபரங்களை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu