ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி

ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்ற அரசு அதிகாரிகள் மாணவ மாணவிகள்
திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புத் துறை சாா்பில், ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சாா்பில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்களிடையே ஊழல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஊழல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அண்ணா நுழைவுவாயில் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியில், திருவண்ணாமலை விஷன் பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் பேரணி நிறைவு பெற்றது.
உறுதிமொழியேற்பு...
இதையடுத்து, ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.
லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளா் வேல்முருகன், ஆய்வாளா் அருள்பிரசாத், உதவி ஆய்வாளா் கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை வாசிக்க, அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா்.
தேசிய ஒருமைப்பாட்டு நாள் மொழியேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது . நிகழ்ச்சிக்கு வட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுகுணா தலைமை வகித்தார் . தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வேணுகோபால் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் மண்டல துணை வட்டாட்சியர்கள் ,வருவாய் ஆய்வாளர்கள், அலுவலக பணியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டு தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதி மொழியை ஏற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu