அண்ணாமலையார் கோயில் புதிய அறங்காவலர்கள் குழு பதவி ஏற்பு

அண்ணாமலையார் கோயில் புதிய அறங்காவலர்கள் குழு பதவி ஏற்பு
X

புதிய அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புதிய அறங்காவலர்கள் குழு பதவி ஏற்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் புதிய அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2007 ஆம் ஆண்டு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர் அக்குழுவின் பதவிக்காலம் கடந்த 2011 இல் முடிவுற்றது அதன் பின் புதிய அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது அண்ணாமலையார் கோவில் அறங்காவலர்கள் குழுவை அமைத்து இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதன்படி அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகர், பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அறங்காவலர்கள் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் ஜோதி அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி ஆகியோர் முன்னிலையில் பொறுப்பேற்றனர்.

பின்னர் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வின் போது திமுக மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ வ.வே. கம்பன் , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் , சட்டமன்ற உறுப்பினர் கிரி , நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன் , நகர மன்ற உறுப்பினர்கள் , திருக்கோயில் ஊழியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai chatbots for business