திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 7ம் தேதி அன்னாபிஷேகம்

திருக்கார்த்திகை தீபத் திருவிழா அழைப்பிதழ் சிறப்பு பூஜைகள் செய்து வெளியிடப்பட்டது
Tiruvannamalai Today News-திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 7ல் அன்னாபிஷேகம் நடக்கிறது.உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவை படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம்.அதன்படி வரும், 7ல் அருணாசலேஸ்வரர் கோவிலில் மூலவர் அருணாசலேஸ்வரர் மற்றும் கல்யாண சுந்தரேஸ்ரவரர் ஆகியோருக்கு, 100 கிலோ அரிசியால் சாதம் செய்து, அன்னாபிஷேகம் நடக்க உள்ளது.இதை முன்னிட்டு, அன்று மாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தொடர்ந்து மாலை, 6:01 மணி முதல் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். கிரிவலம்ஐப்பசி மாத பவுர்ணமி திதி, 7ம் தேதி மாலை, 4:54 முதல், 8ம் தேதி மாலை, 5:59 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும், 8ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு, கோவில் நடை மூடப்படாது. வழக்கம்போல் நடை திறந்திருக்கும். அன்று, கோவில் நான்காம் பிரகாரத்திலுள்ள பிரம்ம தீர்த்தகுளத்தில் தீர்த்தவாரி நடக்கும்.இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துஉள்ளது.
அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா அழைப்பிதழ் பூஜை..
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஸ்ரீ சம்பந்த விநாயகர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா அழைப்பிதழ் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நிகழாண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான அழைப்புகள் கோயில் நிர்வாகம் சார்பில் அச்சடிக்கப்பட்டது இந்த அழைப்புகள் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ சம்பந்த விநாயகர் சன்னதியில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது பிறகு ஊர் முக்கிய பிரமுகர்கள் கோயில் ஊழியர்கள் பக்தர்களிடம் அழைப்புகள் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், திருக்கோயில் ஊழியர்கள், சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்
நவம்பர் 24 ஆம் தேதி ஸ்ரீ துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது.
விழாவில் ஐந்தாம் நாளான டிசம்பர் ஒன்றாம் தேதி வெள்ளி பெரிய ரிஷப வாகனம், 2 ம் தேதி வெள்ளி ரதம், 3 ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், டிசம்பர் 6 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். 8 ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கிரிவலம் , டிசம்பர் 7, 8, 9 , தேதிகளில் தெப்பல் திருவிழா நடைபெறுகிறது.
அருணாசலேஸ்வரர் கோவிலில், நேபாள நாட்டு பக்தர்கள், மகான்யாச ருத்ர யாகம் நடத்தினர்.
உலக நன்மை வேண்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி சன்னிதி முன், நேபாள நாட்டை சேர்ந்த பக்தர்கள், மகான்யாச ருத்ர யாகம் நடத்தினர். ரமேஷ் குருக்கள் தலைமையில் நடந்த யாகத்தில், 25 க்கும் மேற்பட்ட நேபாள நாட்டை சேர்ந்தோர் பங்கேற்றனர்.பின், சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர்கள், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu