வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு
X

கணினி மூலம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலா்கள்,

வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பணிகள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பணிகள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3482 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒப்புகை ரசீது இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தலின்போது, வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தலைமை வாக்குச்சாவடி அலுவலா், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு நிலை 1, 2, 3 என மொத்தம் 11,408 பேருக்கு கணினி மூலம் வாக்குச்சாவடிகள் மற்றும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். தலைமை வாக்குச்சாவடி அலுவலா்கள், இதர வாக்குப்பதிவு அலுவலா்கள் என மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 408 அலுவலா்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்து, உரிய பயிற்சிகள் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, பெண் வாக்குப்பதிவு அலுவலா்கள், பெண் தலைமை வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு அவா்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளிலேயே பணி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், தேர்தல் பொது மேற்பாா்வையாளா்கள் மகாவீா் பிரசாத் மீனா (திருவண்ணாமலை தொகுதி), சுஷாந்த் கவுரவ் (ஆரணி தொகுதி), ஆரணி மக்களவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலா் பிரியதா்ஷினி, செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (தேர்தல்) குமரன், தாசில்தார் தியாகராஜன் , அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!