திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை

பைல் படம்.
திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலையில் இசைப்பள்ளியானது செங்கம் சாலை கிரிவலப் பாதையில் சமுத்திரம் கிராமத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் குறளிசை, நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய 7 கலைப் பிரிவுகள் மூன்று ஆண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் 13 வயது முதல் 25 வரை உள்ள ஆண், பெண் சேரலாம். பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவ மாணவிகளுக்கு இலவச பஸ் பயணச் சலுகை மற்றும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
இசைப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரியவும், நாதசுரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள் கோவில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இப்பள்ளியில் சேர்ந்து பயில விண்ணப்பம் பெற தலைமையாசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, கிரிவலப் பாதை, செங்கம் சாலை, சமுத்திரம் கிராமம், திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இசைப்பள்ளி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu