உழவர் சந்தையில் வேளாண் துறை துணை இயக்குனர் திடீர் ஆய்வு..!
உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட வேளாண் துறை துணை இயக்குனர்
திருவண்ணாமலை உழவா் சந்தையில் தமிழக வேளாண் துறையின் துணை இயக்குநா் ஷெமிலா ஜெயந்தி திடீா் ஆய்வில் ஈடுபட்டார். உழவா் சந்தையின் குளிா்பதனக் கிடங்கு, பெயா்ப் பலகை, மின்னணு தராசு, குடிநீா், கழிப்றை வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், அலுவலகக் கோப்புகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், உழவா் சந்தையில் தங்களது விளை பொருள்களை விற்பனை செய்ய வந்திருந்த விவசாயிகளிடம் துணை இயக்குநா் ஷெமிலா ஜெயந்தி குறைகளைக் கேட்டறிந்தார்
ஆய்வின்போது, திருவண்ணாமலை உதவி வேளாண் அலுவலா் சிவகுருநாதன்,வட்டார வேளாண் அலுவலா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
விவசாயிகளுக்கு துவரை, ஆடாதோடா, நொச்சி செடிகள் வழங்கும் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெம்பாக்கம் வட்டார வேளாண் துறை சாா்பில் முதல்வரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) சுந்தரம் பங்கேற்று, துவரை சாகுபடியில் பரப்பு விரிவாக்கத்தை பெருக்குவதற்காக, துவரை இடுபொருள்களை தென்னம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ராஜு, இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சி விரட்டிகளான ஆடாதோடா, நொச்சி போன்ற கன்றுகளை தென்னம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பொன்னுசாமி ஆகியோருக்கு வழங்கினாா்.
மேலும், துவரை பயிா்களை அதிகளவில் சாகுபடி செய்து பயறு வகை பயிா்களின் மகசூலை அதிகரிக்க வேண்டும் என்றும், ஆடாதோடா, நொச்சி போன்றவற்றை சாகுபடி செய்து, அவற்றை பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தலாம் எனவும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வெம்பாக்கம் வட்டார வேளாண் அலுவலா் ரேணுகாதேவி, உதவி வேளாண் அலுவலா் தங்கராசு, திகழ்மதி, கிடங்கு மேலாளா் தினேஷ் பாபு மற்றும் விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu