/* */

விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் நடவடிக்கை - திருவண்ணாமலை எஸ்.பி., எச்சரிக்கை

விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் நடவடிக்கை - திருவண்ணாமலை எஸ்.பி., எச்சரிக்கை
X
திருவண்ணாமலை எஸ்.பி., பவன்குமார் ரெட்டி.

விளை நிலங்களில் மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., பவன்குமார் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., பவன்குமார் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், விவசாய நிலங்களில் எலி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக விவசாயிகள் சிலர் தங்களின் விளைநிலைங்களை சுற்றி சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கின்றனர். இதன் மூலம் சில நேரங்களில் மனிதர்கள் மற்றும் வன உயிரினங்கள் மின்வேலியில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.

இதனை தடுக்கும் வகையில் இனிவரும் காலங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் விளைநிலங்களில் யாரேனும் மின்வேலி அமைப்பது தெரியவந்தால், அந்த நபர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 2 Aug 2021 7:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?