தேர்தலன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தேர்தலன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
X
தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகின்றது.

இந்நிலையில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் 100 ,சதவீதம் வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள 19 ஆம் தேதி அன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள செய்தி குறிப்பில்

முதன்மை செயலாளர் /தொழிலாளர் ஆணையர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணையின்படி 19ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கும் மக்களவை பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வணிக நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், ஐடிஎஸ்/ பி பி ஓ/ கடைகள் மற்றும் நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அந்தந்த பகுதியில் தேர்தல் நடைபெறும் நாள் அன்று சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு அளிக்காத நிறுவனங்கள் மீது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 153 பி படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

விடுமுறை அளிக்கப்படாத நிறுவனங்களை கண்காணிக்கும் பொருட்டு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மக்களவை பொது தேர்தல் அன்று விடுமுறை அளிக்கப்படாதது தொடர்பான புகார்களை கீழ்கண்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

புகார் அளிக்க வேண்டிய அலைபேசி எண்கள்

மீனாட்சி தொழிலாளர் உதவியாளர் திருவண்ணாமலை, 9710825341

சாந்தி தொழிலாளர் உதவி ஆய்வாளர் , 1 - ம் வட்டம் திருவண்ணாமலை, 9952308664

தொழிலாளர் உதவி ஆய்வாளர் 2- ம் வட்டம் திருவண்ணாமலை, 9442965035

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்