திருவண்ணாமலை: மாலை நேரத்தில் ஆவின் பால் வினியோகம் செய்யும் திட்டம்

மாலை நேரத்தில் பால் வினியோகம் செய்வதற்கான வாகனத்தை, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேலூர் பால் கூட்டுறவு ஒன்றியத்தில் இருந்து திருவண்ணாமலை ஒன்றியம் தனியாக பிரிந்த பிறகு திருவண்ணாமலை நகர பகுதிகளுக்கு காலை ஒரு வேளை மட்டுமே பாக்கெட் பால் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
தமிழக முதல்- அமைச்சர் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலுக்கு இணங்க பால் மற்றும் பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் அனைத்து பொது மக்களுக்கும் அனைத்து நேரங்களிலும் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், மாலை நேரங்களில் தினந்தோறும் பால் வினியோகம் செய்யும் திட்டம் திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டு உள்ளது.
அதன்படி, மாலை நேரத்தில் பால் வினியோகம் செய்வதற்கான வாகனத்தினை, நேற்று மாலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி ஆதரவினை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் ராஜ்குமார், துணைப்பதிவாளர் ராஜா, விற்பனை மேலாளர் சாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu