தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. வருவாய்த் துறை சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடிய பகுதிகள், நிவாரண முகாம்களை வருவாய் கோட்டாட்சியர்கள் ஆய்வு செய்து, பேரிடரால் ஏற்படும் மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு, வீடுகள் சேதத்திற்கான நிவாரண உதவி காலதாமதமின்றி வழங்கவும், மேலும் ஜெனரேட்டர், பொக்லைன் எந்திரம், தனியார் ஆம்புலன்ஸ், மரம் அறுக்கும் எந்திரங்கள் போன்றவற்றின் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், நீர் வெளியேறும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதற்கு அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கி ணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

காவல்துறை சார்பில் காவல் துறை பேரிடர் கால மீட்பு நடவடிக்கை குறித்த பேரிடர் மேலாண்மை திட்டத்தினை தயார் செய்து பேரிடர் குறித்த பயிற்சி பெற்ற காவலர்கள் மீட்பு நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் MGNREGS திட்டத்தின் மூலம் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீர்வரத்து கால்வாய்கள் மற்றம் நீர் வெளியேறும் கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளைகண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்து, மழைநீர் தேங்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு நீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் எடுத்து, மழைக்காலங்களில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) சார்பில் கட்டுபாட்டில் உள்ள ஏரிகளின் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழை வெள்ளம் எவ்விததடங்களும் இன்றி ஏரிகளுக்கு செல்லும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, ஏரி கரைகளில் உடைப்பு ஏற்படும் நேர்வுகளில் அதனை உடனடியாக சரிசெய்ய தேவையான மணல் மூட்டைகள், தயாராக வைத்திருக்கவும், ஏரிகளின் மதகுகள் சரியாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்யப்பட வேண்டும். நெஞ்சாலைத்துறை சார்பில் பாலங்கள் மற்றும் மதகுகளை சுத்தம் செய்து தடையற்ற நீரோட்டத்திற்கு வழிவகை செய்து , தற்போது கட்டப்பட்டு வரும் பாலங்கள் மற்றும் மதகுகளை அதிக அளவு நீர் வெளியேறும் வகையில் அமைக்கவும், சாலைகளில் மரங்கள் விழுந்தால் அதனை உடனடியாக அகற்றுவதற்கான நடவடி க்கைககள் மேற்கொள்ள வேண்டும்.

நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் சார்பில் அதிக அளவு திறன்கொண்ட மோட்டார் பம்புகள், பைப்புகள் தாழ்வான பகுதிகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், மழைநீர் வடிகால் கால்வாய்களை மழைக்காலங்களுக்கு முன்னதாகவே தூர்வாரிட வேண்டும். மழைநீர் தேங்கியுள்ளகுடியிருப்பு பகுதிகளில் நீ ரை வெளியேற்றுவதற்கான அனைத்து சாதனங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து சார்பில் தனியார் பேருந்துகள், லாரிகள், டிரக்குகள் ஆகியவற்றின் பட்டியலை வாகன எண் வாரியாகதயார் நிலையில் வைத்திருக்கவும், மேலும் அவற்றின் ஓட்டுநர்களின் பெயர் மொபைல் எண்ணுடனான விவரங்களையும் சேகரித்து வைத்திருக்க வேண்டும்.

பொது சுகாதாரத்துறை சார்பில் மருத்துவமனைகளில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும் வகையில் தேவை ய ான ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், ஜெனரேட்டர்களை மழைநீர் வெள்ளம் சூழாத வகையில் உயரமான பகுதியில் வைக்கவும், ஆக்ஸிஜன் சிலின்டர்கள், உயிர்காக்கும் கருவிகள், மருந்துகள் மற்றும் பாம்பு கடிக்கு எதிரான மாற்று மருந்துகள் போன்றவை தேவையான அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள பொ துமக்களை பாதுக்காப்பான பகுதிகளுக்கு வெளியேற்றுவதற்கான திட்டத்தினை வகுக்க வேண்டும் . வட்ட அளவில் அதிக அளவு மாதிரி ஒத்திகை பயிற்சி தன்னார்வலர்களுக்கும், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் அளித்தல் வேண் டும். மீ ட் பு வாகனங்கள் மற்றும் மீட்பு உபகரணங்களையும் நல்ல நிலையில் செயல்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிக்கட்டிடங்கள் நல்ல உறுதித்தன்மை கொண்டதாக இருப்பதை உறுதிசெய்து, இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை இடிப்பதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் அத்தியாவாசிய பொருட்களை போதுமான அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள் அனைத்தும் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டு, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்து, மின்கம்பிகளுக்கு மேல் மரக்கிளைகள் சென்றால் உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும், தேவையான மின்கம்பங்கள், மின்கம்பிகள் போன்றவை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் .பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர்கள் மந்தாகினி (திருவண்ணா மலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி) மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story