கொக்கு கறி சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு

கொக்கு கறி சாப்பிட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு
X
வந்தவாசி அருகே கொக்கு கறி சாப்பிட்ட நர்சிங் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்

திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்:

வந்தவாசி அருகே பொன்னங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி . இவரது மகள் மஞ்சு என்ற அஸ்வினி . இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிப்ளமோ நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

இந்த நிலையில் மஞ்சு கடந்த 11-ந் தேதி வயலுக்குச் சென்ற போது வயல் சேற்றில் கிடந்த கொக்கு ஒன்றை எடுத்து வந்து கொக்குக்கறியை சமைத்து சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வாந்தி வந்தது. உடனடியாக அவரை உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாராயம், மது விற்ற 3 பேர் கைது

கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் கிராமத்தில் குமார் என்பவர் தனது வீட்டில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த போது கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேட்டு அவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அர்ச்சுனாபுரம் புதூர் பகுதியில் கவிதா , சிவலிங்கம் ஆகிய இருவரும் தங்கள் வீட்டில் பின்புறம் சாராயம் பதுக்கி வைத்திருந்த போது கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 85 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் உண்டியலை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது

திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தேனிமலை மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல் காணவில்லை என்று அக்கோவிலின் தர்மகர்த்தா திருவண்ணாமலை டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலை கம்பங்கொல்லை தெருவை சேர்ந்த சங்கீதா மற்றும் தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலாபுரத்தை சேர்ந்த செல்வின்துரை என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் தண்டராம்பட்டு சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலின் உண்டியலை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1530 மற்றும் கூர்மையான ஆயுதம் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil