அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சென்னை பக்தர்

அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்த சென்னை பக்தர்
X
திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த சென்னை பக்தர் வீடு திரும்ப பஸ் நிலையத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.

திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த சென்னையை சேர்ந்த பக்தர் வீடு திரும்ப பஸ் நிலையத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.

சென்னை கொளத்தூர் வெற்றி நகர் பகுதியை சேர்ந்தவர் மணி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், சென்னையில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தனியாக வந்திருந்தார். கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்து விட்டு, காலை சென்னை செல்வதற்காக திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது, பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை முன்பு அமர்ந்திருந்த மணி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக, அங்கிருந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனாலும், சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மாரடைப்பில் அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார், இறந்த மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் டயர் வெடித்து பெண் உயிரிழப்பு

சேத்துப்பட்டு- போளூர் சாலையில் செல்லும் போது கார் டயர் வெடித்து அரசு மீது மோதிய விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கலசபாக்கம் அடுத்த அலங்காரமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமிகண்ணு. இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர் கடந்த 5 நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சேத்துப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினர். அப்போது மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இவருடன் தனது மகள் வித்யா, அவரது தாய் மல்லிகா ஆகியோரும், பாடகம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் பாலாஜி என்பவரின் காரில் வீடு திரும்பினர். காரை பாலாஜி ஓட்டினார்.

அப்போது சேத்துப்பட்டு- போளூர் சாலையில் செல்லும்போது எதிர் பாராதவிதமாக காரின் முன்பக்க டயர் வெடித்து போளூரில் இருந்து சென்னையை நோக்கி வந்த அரசு பஸ் மீது பயங்கர சத்தத்துடன் மோதி நொறுங்கியது.

இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இவர்களை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவர் பாலாஜி மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும், விஜயலட்சுமி, வித்யா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!