/* */

10ம் வகுப்பு தேர்வு முதல் நாளிலிலேயே 885 பேர் ‘ஆப்சண்ட்’

திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 32 ஆயிரத்து 436 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

HIGHLIGHTS

10ம் வகுப்பு தேர்வு முதல் நாளிலிலேயே 885 பேர் ‘ஆப்சண்ட்’
X

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 32 ஆயிரத்து 436 மாணவ, மாணவிகள் எழுதினர். 885 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தமிழ்நாட்டில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்விற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. செய்யாறு கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 699 பேரும், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 19 ஆயிரத்து 622 பேரும் என திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 321 மாணவ, மாணவிகள் இத்தேர்விற்காக விண்ணப்பித்து இருந்தனர்.

இதில் நேற்று நடந்த தேர்வை 32 ஆயிரத்து 436 பேர் எழுதினர். 885 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் 154 முதன்மை கண்காணிப்பாளர்கள், 154 துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படையினர், அறைக் கண்காணிப்பாளர்கள், சொல்வதை எழுதுபவர்கள், வழித்தட அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள், மதிப்பெண் சாரிபார்க்கும் அலுவலர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் தடையில்லாத மின்சார வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பஸ் வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் தேர்வு மையங்களில் பள்ளிக் கல்வித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தரைத்தளத்திலேயே தேர்வெழுத போதிய அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை கலெக்டர் முருகேஷ் தெள்ளார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத சென்ற மாணவிகளுக்காக சிறப்பு வழிபாடு செய்து ஆசிரியைகள் மாணவிகளுக்கு திலகமிட்டு தேர்விற்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 7 April 2023 12:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்