திருவண்ணாமலை மக்கள் குறை தீர் கூட்டத்தில் 350 மனுக்கள்

திருவண்ணாமலை மக்கள் குறை தீர் கூட்டத்தில் 350 மனுக்கள்
X

பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் முருகேஷ்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 350 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 350 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடமிருந்து இலவச மனைப் பட்டா, கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 350 மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா் ஆட்சியா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்ட தொடா் நடவடிக்கைகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஆ.சண்முகசுந்தரம் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

விவசாயிகள் நுாதனப் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்கக் கோரி, துாக்குக் கயிறுடன் விவசாயிகள் நுாதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மரங்களும், சுமாா் 1,200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிா்களும் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி கட்சி சாா்பற்ற உழவா் பேரவை சாா்பில் நூதனப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற விவசாயிகள் தங்களது கழுத்துக்கு நேராக தூக்குக் கயிறுகளை வைத்துக் கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிறிது நேர போராட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!