100% வாக்குப்பதிவு - நகராட்சி ஊழியர்கள் சைக்கிள் பேரணி

100%  வாக்குப்பதிவு - நகராட்சி ஊழியர்கள் சைக்கிள் பேரணி
X

வந்தவாசியில் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நகராட்சி சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை நகராட்சி பொறியாளர் உஷாராணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதை தொடர்ந்து நடைபெற்ற சைக்கிள் பேரணியில் அனைவரும் கட்டாயம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி ஊழியர்கள் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.இந்த சைக்கிள் பேரணி வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி பழைய பஸ்ஸ்டாண்ட் பஜார் சாலை தேரடி பகுதி, காந்தி சாலை, காஞ்சிபுரம் சாலை வழியாகச் சென்று முடிவடைந்தது.

Tags

Next Story
தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படாததால் ஆர்ப்பாட்டம்..!