பேருந்து,கார்கள் மோதி விபத்து- 4 பேர் உயிரிழப்பு

பேருந்து,கார்கள் மோதி விபத்து- 4 பேர் உயிரிழப்பு
X

அரசு பேருந்து கார் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 15 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த ஸ்ரீபால் என்பவர் குடும்பத்தோடு திருவண்ணாமலை மின் நகரிலுள்ள உறவினர் வீட்டிற்கு காரில் வந்த போது ஸ்ரீபால் மற்றும் அவரது மனைவி பிரியா மற்றும் சாந்தி மாமனார் சதீஷ், குழந்தைகள் மிருதுலா ஆரியா ஆகியோர் சென்னையிலிருந்து திருவண்ணாமலையை அடுத்த ஊசாம்பாடி அருகில் வரும்போது திருவண்ணாமலையிலிருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த ஸ்ரீபால், பிரியா, சாந்தி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்த சதீஷ் குழந்தைகள் மிருதுளா ஆரியா ஆகிய 3 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் திருவண்ணாமலையிலிருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பேருந்து நிலை தடுமாறியதில் பின்னால் வந்த காரின் மீது மோதி அரசு பேருந்தும் கவிழ்ந்ததில் அரசு பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

அரசு பேருந்தில் பயணித்தவர்கள் பின்னால் வந்த பல்வேறு வாகனங்களில் சிறு காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் 13 பேர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி., அரவிந்த் நேரில் பார்வையிட்டு விபத்துக்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.மேலும் கிராமிய காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்