ஆவின் அதிகாரிகளை கண்டித்து உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆவின் அதிகாரிகளை கண்டித்து உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆவின் துணை பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் எஸ்ஐக்கள் லஞ்சம் கேட்டு செக் பவரை ரத்து செய்து வருகிறார்கள் எனவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர்கள் துணைப் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அருகே உள்ள வாணாபுரம் வரகூர் இளங்குன்னி பெருங்குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர், திருவண்ணாமலையில் உள்ள ஆவின் துணை பதிவாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பால் பட்டுவாடா வழங்க முடியாமல் செக் பவர் அதிகாரத்தை நிறுத்தி வைத்த எஸ்ஐகளை கண்டித்தும், புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செயலாளர்கள் கூறியதாவது . ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நாங்கள் எல்லாம் செயலாளர்கள். ஆவின் அலுவலகத்தில் பணிபுரிபவர்களால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்கள். இவர்களுக்கு பால் உற்பத்தி செய்யும் மையம் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்வது மட்டும்தான். ஆனால் இவர்கள் ஏதாவது ஒரு குறை கூறி கூட்டுறவு செயலாளர்களின் காசோலை அதிகாரத்தை ரத்து செய்கின்றனர் . இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கு பண பட்டுவாடா செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு மையத்திற்கு வரும் போது வஞ்சம் கேட்கின்றனர் . அவர்கள் கேட்ட தொகையை கொடுக்க வில்லை என்றால் இந்த நடவடிக்கையை செய்கிறார்கள். இங்கு இன்ஸ்பெக்டர்கள், முதுநிலை இன்ஸ்பெக்டர்கள் பல ஆண்டு காலமாக இதே பகுதியில் பணிபுரிந்து வருகின்றனர் . இவர்கள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்யவேண்டும் அல்லது தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் .

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!