கருவூல அலுவலகத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு

கருவூல அலுவலகத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு
X

கருவூல ஆவணங்கள் அறையில் கருநாகப்பாம்பு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகே சார்நிலை கருவூலம் அமைந்துள்ளது.கருவூலத்தின் உள்ளே ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சுமார் 3 அடி நீள கரு நாகப்பாம்பை கண்ட கருவூல ஊழியர்கள் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அங்கிருந்த பொருட்களை அகற்றி பெட்டியின் அடியில் சிக்கிய பாம்பை லாவகமாக பிடித்தனர்.பின்னர் அதனை பத்திரமாக பிளாஸ்டிக் குழாயில் அடைத்து அருகிலுள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர். கருவூல அலுவலகத்தில் பாம்பு பிடிபட்ட நிகழ்வால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!