அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழா நேரடி நெய் விற்பனை தொடக்கம்
நேரடி நெய் விற்பனை நிகழ்வை துவக்கி வைத்த கனரா வங்கி மேலாளர் சிவராமன் மற்றும் திருக்கோயில் அதிகாரிகள்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
திருவிழா செலவுகளைச் சமாளிக்க ஊா் முக்கிய பிரமுகா்கள் காணிக்கை செலுத்துவதற்காக பிராா்த்தனை உண்டியல்கள் வைக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு திருவிழாவுக்கான பிராா்த்தனை உண்டியல் வைத்தல், காணிக்கை பெறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கோயில் மூன்றாம் பிரகாரத்தில் கோயில் அதிகாரிகள் தலைமையில் 2 வெள்ளி உண்டியல்கள் வைக்கப்பட்டு, ஊா் முக்கிய பிரமுகா்களிடமிருந்து காணிக்கை பணம் பெறப்பட்டது. யாா், யாா் எவ்வளவு பணம் தருகிறாா்கள் என்று பதிவு செய்யப்பட்ட பிறகே, உண்டியலில் காணிக்கைப் பணம் செலுத்தப்பட்டது.
நேரடி நெய் விற்பனை
தீபத் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்துக்கு தேவையான நெய்யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதற்காக, ஆண்டுதோறும் தீபத் திருவிழாவின்போது நேரடி நெய் விற்பனை கோயிலில் தொடங்கப்படும். நிகழாண்டுக்கான தீபத் திருவிழா நேரடி நெய் விற்பனை தொடங்கியது.
கோயில் ராஜகோபுரம், கொடி மரம் பகுதி, திருமஞ்சன கோபுரம் நுழைவு வாயில் ஆகிய 3 இடங்களில் நெய் விற்பனை கவுண்டா்கள் செயல்படும். ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ நெய் ரூ.150, கால் கிலோ நெய் ரூ.80 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பக்தா்கள் பலா் தாங்கள் செலுத்த விரும்பும் நெய் காணிக்கைக்கு ஏற்ற தொகையைச் செலுத்தி நெய் காணிக்கை அளித்து வருகின்றனா்.
டிசம்பா் 10-ஆம் தேதி வரை இந்த நேரடி நெய் விற்பனை நடைபெறும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது. நேரில் வர இயலாத பக்தா்கள் நிா்வாக அதிகாரி, அருள்மிகு அருணாசலேஸ்வரா் கோயில், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு மணியாா்டா் அல்லது வங்கி வரைவோலை எடுத்து அனுப்பலாம். இணையவழியிலும் நெய் காணிக்கை செலுத்தலாம் என்று கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu