/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் திடீர் மழை: பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை,கீழ்பென்னாத்தூர் பகுதியில் பெய்த திடீர் மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில்  திடீர் மழை: பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை தொடங்கும் முன்னரே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொளுத்தி வந்த வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக106 டிகிரி அளவிற்கு வெயில் சுட்டெரித்தது.

இதனால் ஏற்பட்ட கடுமையான வெப்பம் காரணமாக வயதானவர்கள் பகலில் வெளியில் வராமல் வீட்டிலேயே மாலை வரை முடங்கி கிடந்தனர். இந்த நிலையில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கிய நிலையில் காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

மதியத்துக்கு மேல் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து மாலையில் கீழ்பென்னாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் திடீர் மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் மாலை 4:30 முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இடி மின்னல் அதிகமாக இருந்ததால் திருவண்ணாமலையில் நகரின் பல இடங்களில் மின் வினியோகம் தடைப்பட்டிருந்தது.

செங்கம், போளூர், கலசப்பாக்கம் பகுதிகளில் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

செய்யாறு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் 3 சென்டி மீட்டர் அளவிற்கு மழை. பதிவாகி இருந்தது. கத்திரி, வெண்டை, மிளகாய், கீரை போன்ற தோட்டப் பயிர்களை பயிரிட்ட விவசாயிகள் திடீரென பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை மணிலாவிற்கும் ஏற்றது என விவசாயிகளும் தெரிவித்தனர்.

Updated On: 5 May 2022 2:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?