திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்
X

சிறப்பு மனுநீதி நாள் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவுக்கு உட்பட்ட சென்னாவரம் மற்றும் பாதிரி ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் சென்னாவரம் கிராமத்தில் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். வட்டாட்சியர்கள் முருகானந்தம், சுபாஷ்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 27 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 70 பேருக்கு பட்டா மாற்றம், 35 பேருக்கு குடும்ப அட்டை, 24 பேருக்கு முதியோர் மற்றும் இதர உதவித்தொகை, 37 பேருக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய அட்டை, 5 பேருக்கு சலவைப்பெட்டி உள்பட 248 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி வழங்கினார்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் எஸ்.வீரராகவன், வெ.அரிகிருஷ்ணன், வந்தவாசி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மாரியம்மாள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

சேத்துப்பட்டு தாலுகா உலகம்பட்டு, மருத்துவம்பாடி, கொத்தவாடி ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் உலகம்பட்டு கிராமத்தில் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

சேத்துப்பட்டு வட்டாட்சியர் கோவிந்தராஜ், சமூகநல வட்டாட்சியர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலகம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வேல்விழி அறிவழகன் வரவேற்றார். முகாமில் 87 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தனித்துணை கலெக்டர் வழங்கினார்.

மேலும் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான் மற்றும் உளுந்து விதை வழங்கப்பட்டது. முகாமில் வருவாய் ஆய்வாளர் கன்னியப்பன், வேளாண்மை அலுவலர் இலக்கியா, தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலாஜி, உதவி தோட்டக்கலை அலுவலர் சுதாகர், மண்டல துணை தாசில்தார் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் கோமதி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

போளூரை அடுத்த கஸ்தம்பாடி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி பார்த்தீபன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவி பவுனு அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டாட்சியர் அருள் வரவேற்றார்.

முகாமில் 315 மனுக்கள் பெறப்பட்டு, 109 மனுக்கள் ஏற்கப்பட்டன. 54 மனுக்கள் தள்ளுபடியும், 152 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. அதைத் தொடர்ந்து 109 பேருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி பார்த்தீபன் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் வேளாண்மை துறை அதிகாரிகள் சதீஷ்குமார், ராமு மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் எலத்தூரில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் குமரன் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 120 பயனாளிகளுக்கு சுமார் 6 லட்சம் மதிப்பில் நல திட்டங்கள் வழங்கப்பட்டது.

வட்டாட்சியர் தக்ஷிணாமூர்த்தி, வட்டார கல்வி அதிகாரி ஜோதி, ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
வாட்சப்புல கால் ரெகார்ட் பண்ணிக்கலாமா , வாங்க எப்புடின்னு பாக்கலாம்