மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு சிறப்பு பயிற்சி

மாற்றுத் திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு சிறப்பு பயிற்சி
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு வழங்குவதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறுகிறது

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வு மூலம் அரசு பணி மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு, சுயதொழில் கடன் உதவி திட்ட விலக்கம் பெறுவதற்கும் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட தொழில் திறன் பயிற்சி மையம் ஆகியவை இணைந்து வருவாய் கோட்ட அளவில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் வருகின்ற 6ம் தேதியும், ஆரணியில் 11ம் தேதியும் , செய்யாற்றில் 20ஆம் தேதியும் சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகங்களில் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.

இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, மருத்துவ சான்று, கல்விச்சான்று , ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நேரில் வந்து பயன்பெறலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story
ai in future agriculture