குடியரசு தின விழா: திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது

குடியரசு தின விழா:  திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது
X

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 73 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், திருவண்ணாமலை எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டது.. அதையொட்டி, காலை 8.05 மணியளவில், கலெக்டர் முருகேஷ் தேசிய கொடியேற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.. பின்னர், அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றுகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

விழாவில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, வழக்கமாக நடைபெறும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும், தியாகிகளை நேரில் அழைத்து கவுரவிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, தியாகிகளின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று மரியாதை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவில் பங்கேற்போர் சமூக இடைவெளியை பின்பற்றவும், கிருமி நாசினி மூலம் கைகளை தூய்மை செய்யவும், முகக்கவசம் அணியவும் தேவையான விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசு தின விழா நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

73வது குடியரசு தின விழா தமிழ் நாடு காந்தி பேரவை நிறுவனத்தலைவர் பி.எஸ்.விஜயகுமார் அவர்கள் காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆரணியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஆரணி கோட்டாட்சியர் கவிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்,

கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஒன்றிய குழுத்தலைவர் அன்பரசி ராஜசேகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார், நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தண்டராம்பட்டு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுத்தலைவர் பரிமலா கலையரசன் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் ஆரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ஜுனன் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

போளூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வட்டாட்சியர் சண்முகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் பின்னர் தியாகிகளின், வாரிசுகளின் இல்லத்திற்கே சென்று வட்டாட்சியர் சண்முகம் அவர்களை கவுரவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil