நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரம்
X

கலெக்டர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 455 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்தார்

மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 455 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ள 130 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 18ம் தேதி வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

தேர்தல் நடத்தை விதிகள் முறையாக கடைபிடிக்க படுகிறதா என்பதை தேர்தல் பார்வையாளர்கள் கண்காணித்து வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்