போளூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரிப்பு

போளூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரிப்பு
X
திருவண்ணாமலை, போளூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்கள், ஸ்டாலின் பிரசாரம்தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார்.

அவர் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போளூர் தொகுதிக்குட்பட்ட பெரணமல்லூர் பகுதியில் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு கூடியிருந்தவர்களிடம் அவர் பேசியதாவது: செம்மாம்பாடி ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்று பேசினார்.

மேலும், பல்வேறு வகையிலான திட்டங்களை இந்த கிராமத்திற்கு கொண்டு வருவேன் எனவும் வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!