ஜமுனாமரத்தூர் அருகே மலைவாழ் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்
விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட மலைவாழ் பெண்கள்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் அடுத்த கீழ்விழாமூச்சி மற்றும் கூட்டாத்தூர் கிராமங்களில் மலைவாழ் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாம் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரியம் சார்பில் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.பரந்தாமன் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சிமன்றத் தலைவர் எஸ்.சந்தியா கலந்துகொண்டார். ஆசிரியர்கள் முருகன், வேலாயுதம், குமார் மற்றும் டிவிஎஸ் தொண்டு நிறுவனத்தின் களப்பணியாளர்கள் ஜெயபால், குமாரன், குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தேசிய தொழிலாளர் கல்வி மற்றும் வளர்ச்சி வாரிய சென்னை மண்டலத்தின் கல்வி அலுவலர் கே.ராமரத்தினம் தலைமை தாங்கி உரையாற்றினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தை 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' (AZADI KA AMRIT MAHOTSAV) என 07.03.2022 முதல் 13.03.2022 வரை கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தியாவின் புகழ்பெற்ற மொழி, கலாச்சாரம் மற்றும் மக்களின் தனித்துவமான பன்முகத்தன்மையை கவுரவிக்கும் ஒரு முயற்சியாக கொண்டாடப்படுகிறது.
அதேபோல் ஒரு முன்னணி பொருளாதார சக்தியாக இந்தியா வளர்ச்சியடைந்ததை கொண்டாடும் வகயைில் ICONIC வாரத்தில் பல முன் முயற்சிகள், திட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் 'இந்தியா 2.0' , 'ஆத்ம நிர்பர் பாரத்' திட்டங்களை செயல்படுத்தும் இயக்கத்தை உருவாக்குவதற்காக 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' வாரம் அமைச்சரகத்தால் கொண்டாடப்படுகிறது என்பதை வலியுறுத்தினார்.
முகாமில் மகளரின் திறனை வெளிப்படுத்தும் விதமாக சர்வதேச மகளிர் தினத்தின் தனித்துவமாக ஒரு வார காலம் சமூக பாதுகாப்பு சேவையின் மூலம் பெண்களுக்கு மதிப்பளித்தல், அதிகாரம் அளித்தல் மற்றும் சிறப்பு உணர்வை ஏற்படுத்துதல், பெண்களின் உரிமை கோரல்களை 100 சதவீதம் செயல்படுத்துவளை உறுதி செய்தல் ஆகியவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் மத்திய மாநில அரசின் திட்டங்களான முத்ரா திட்டம், பிஎம் கிசான் திட்டம், அடல் பென்சன் திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பென்சன் திட்டம், சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் போன்றவைகள் விவாதிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மகளிர் பேரணியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் நிறைவாக செங்கம் கோல்டன் அறக்கட்டளையின் A.அமாவாசை நன்றியுரை வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu