முக்கிய கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படாததால் இன்றும் வேட்பு மனுதாக்கல் இல்லை

முக்கிய கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படாததால் இன்றும் வேட்பு மனுதாக்கல் இல்லை
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய கட்சி வேட்பாளர் பற்றிய அறிவிப்பு இல்லாததால் இன்றும் வேட்பு மனுதாக்கல் இல்லை

நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி உள்ளிட்டவைகளுக்கு தேர்தல் வருகின்ற பிப்.19-ந்தேதி நடைபெறுகிறது. நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்த ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆரணி நகர மன்றத் தேர்தலில் 11 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் மட்டும் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்

பிரதான கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை அந்தந்த மாவட்ட அளவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் நாளை மறுதினம் அமாவாசை தினம் என்பதாலும் கடந்த இரண்டு நாட்களாக ஒருவர்கூட மனு தாக்கல் செய்யவில்லை.

இது குறித்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறுகையில், போதிய கால அவகாசம் இல்லாததால் மனுதாக்கல் உடன் அளிக்க வேண்டிய ஆவணங்களை சேகரித்து, சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் கால அவகாசம் தேவைப்படுகிறது என தெரிவித்தனர்.

நாளை விடுமுறை தினம் என்பதால் நாளை மறுதினம் உள்ளாட்சித் தேர்தல் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!