5-வது கட்டமாக நடந்த முகாமில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திட அனைத்துத்துறையின் ஒருங்கிணைப்புடன் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. நான்காம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 53,892 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
5ம் கட்ட தடுப்பூசி முகாம் 1,017 இடங்களில் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய சிறப்பு முகாம் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து 5-வது வாரமாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 1,075 இடங்களில கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை 57 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். 18 வயதிற்கு மேல் தகுதியுடையவர்கள் முதல் தவணை மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் நடந்த தடுப்பூசி முகாம்களில் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 20 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu