மழை பாதித்த பகுதிகளில் 30 நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்கள்

மழை பாதித்த பகுதிகளில் 30 நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்கள்
X

நடமாடும் மருத்துவ குழு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் 30 நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் பாதித்த பகுதிகள், தாழ்வான பகுதிகள், ஆற்றுப் படுகைகள் ஆகிய இடங்களில் காய்ச்சல் முகாம்கள்,கொரோனா தடுப்பூசி பணிகள், கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்களை அமைக்க தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 30 நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுக்களிலும் மருத்துவ அலுவலா், சுகாதார செவிலியா், மருந்தாளுநா், சுகாதார ஆய்வாளா், மருத்துவப் பணியாளா் ஆகியோர் பணியில் இருப்பார்கள்.

எனவே, பொதுமக்கள் தங்களது பகுதிக்கு வந்து செயல்படும் தற்காலிக மருத்துவக் குழுக்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!