மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீரேற்ற பைப் லைன் : எம்.எல்.ஏ நடவடிக்கை

புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பாஞ்சாரை பகுதியில் 8 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஏரி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து மேல் நீர் தேக்கத் தொட்டியில் பைப் லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யும் பணி நடந்தது. இந்த பணி முடிந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீர் நிரப்பாமல் இருந்தது. பின்னர் மீண்டும் 2020 ஆம் ஆண்டு ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் மீண்டும் பைப்லைன் பதித்தனர். ஆனால் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாததால் தண்ணீரை நிரப்பாமல் வைத்திருந்தனர்.
தற்போது வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமாரிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று சட்டமன்ற உறுப்பினர் அந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்பு வந்தவாசி கோட்ட உதவி செயற்பொறியாளரிடம் உடனடியாக ஏரியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றிலிருந்து தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் இன்று ஜேசிபி இயந்திரம் வரவழைத்து பைப்லைன் அமைக்கும் பணியை தொடங்கினர். இப்பணி இன்னும் இரண்டு நாட்களில் முழுமையடையும் என பிடிஓ தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu