திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் வேலு பங்கேற்ற நிகழ்சிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைச்சர் வேலு பங்கேற்ற நிகழ்சிகள்
X

செங்கத்தில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சர் வேலு 

ஆரணி, செங்கம், செய்யாறு ஆகிய தொகுதிகளில் பல்வேறு அரசு கட்டடங்களை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

ஆரணி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு கட்டிடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு இன்று திறந்து வைத்தார். பின்னர் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

செங்கம் சட்டமன்றத் தொகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ஆய்வு மாளிகை கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, கலந்துகொண்டு திறந்து வைத்தார் .

தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தாட்கோ மூலம் விவசாயிகளுக்கு டிராக்டர்களை வழங்கினார்

செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அரசு கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளை சார்ந்த அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!