கீழ்பென்னாத்தூர், செங்கம் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி

கீழ்பென்னாத்தூர், செங்கம் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி
X

5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்ட நகைகளை பயனாளிகளுக்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரிவழங்கினார்.

கீழ்பென்னாத்தூர் மற்றும் செங்கம் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 382 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

கீழ்பென்னாத்தூரில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகைக்கடன் பெற்ற 382 பேர் தமிழக அரசின் பொது நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி உடையவர்கள் என வங்கி அறிவிப்பு பலகையில் பெயர் பட்டியல் வெளியிட்டனர்.

இதனை அறிந்த, வங்கி வாடிக்கையாளர்கள் பட்டியலை பார்த்தும், வங்கி மேலாளர் அறிவுரையின்படியும் நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் பெற நடவடிக்கை மேற்கொண்டனர்.

நகைக்கடன் தள்ளுபடி பெற தேவையான ஆவணங்கள் என நகைக்கடன் பெற்றதற்கான வங்கி ரசீது, நகைக்கடன்தாரரின் குடும்ப அட்டை நகல் சான்று, நகைக்கடன்தாரர் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு நகல்கள் தேவை என வங்கி மேலாளர் தெரிவித்தார்.

தேவையான ஆவணங்களுடன் வந்த சம்மந்தபட்ட நபர்களுக்கு வங்கிமுறைப்படி பதிவு செய்து, நகைகளையும், நகைக்கடன் சான்றிதழையும் சம்மந்தப்பட்ட நபருக்கு கூட்டுறவுவங்கி மேலாளர் சிவாஜி வழங்கினார். காசாளர் சண்முகம், நகை மதிப்பீட்டாளர் ரவிச்சந்திரன் உடன் இருந்தனர்.

செங்கம் தொகுதியில் மேல் ராவந்தவாடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில்தேவையான ஆவணங்களுடன் வந்த சம்மந்தபட்ட நபர்களுக்கு வங்கிமுறைப்படி பதிவு செய்து, நகைகளையும், நகைக்கடன் சான்றிதழையும் சம்மந்தப்பட்ட நபருக்கு தள்ளுபடி செய்யப்பட்ட 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்ட நகைகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பயனாளிகளுக்கு வழங்கினார்.

இவ்விழாவில் கூட்டுறவு சங்கத் தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் சேட்டு, ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்