கீழ்பெண்ணாத்தூர் அருகே 38 மாடுகள், 11 பேர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு

கீழ்பெண்ணாத்தூர் அருகே 38 மாடுகள், 11 பேர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு
X

வெள்ளத்தில் சிக்கிய மாடுகளை மீட்கும் தீயணைப்புத்துறையினர்.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் அருகே வெள்ளத்தில் சிக்கிய 38 மாடுகள், 11 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

திருவண்ணாமலை மவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், அரும்பாக்கம் கிராமத்தில் துரிஞ்சலாறு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்த வெள்ளத்தில் 38 மாடுகளுடன் 11 பேர் சிக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து, வேட்டவலம் தீ அணைப்பு மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் சுமார் காலை 8.30 மணியளவில் 5 ஆண்கள், 3 பெண்கள், 3 குழந்தைகள், 36 மாடுகளையும் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட மாடுகள் மேடான பகுதியில் விடப்பட்டுள்ளன. 4 மாடுகள் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்டவர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

மீட்பு நடவடிக்கையில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த சட்டப் பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்.

Tags

Next Story
the future of ai in healthcare