வீட்டுமனை பட்டா கேட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம்
X

வீட்டுமனை பட்டா கேட்டு கலசபாக்கம் தாலுகா அலுவகத்திலட பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

வீட்டுமனை பட்டா கேட்டு கலசபாக்கம் தாலுகா அலுவகத்திலட பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலசபாக்கம் தாலுகா பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்றனர்.

அவர்கள், தாங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி நீர்நிலை அல்லாத வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி வருவதை கண்டித்தும் வட்டாட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தியை சந்தித்து தங்கள் மனுவை அளித்தனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது