லாரியை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம்

லாரியை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம்
X

சாலையை சரிசெய்யக்கோரி வாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

கலசபாக்கம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி லாரியை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலசபாக்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட பானுநகர் நடுத்தெருவில் உள்ள சிமெண்டு குடோனில் இருந்து அடிக்கடி இந்த சாலை வழியாக சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி செல்வதால் சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் பழுதான சாலையை உடனடியாக சரிசெய்து கொடுக்கக் கோரி அப்பகுதி பெண்கள் லாரியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிகாரிகள் நேரில் வந்து விரைவில் சாலை சரி செய்து தரப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சிறைபிடித்து லாரியை விடுவித்தனர்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்