வங்கியில் வேலை கிடைத்ததால் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பெண்

வங்கியில் வேலை கிடைத்ததால் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பெண்
X

 ராஜினாமா  கடிதத்தை கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலுவிடம் வழங்கினார்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை கிடைத்ததால் கலசபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மேல்வில்வராயநல்லூர் ஊராட்சி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த கிராமப்பபுற உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவராக பெண் என்ஜினீயர் நிலவழகி பொய்யாமொழி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். இவருக்கு தற்போது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வேலை கிடைத்து உள்ளது. இதனால் ஊராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலுவிடம் வழங்கினார்.

அதன்பின் நிலவழகி பொய்யாமொழி கூறுகையில், எனது பணியை கிராம மக்களுக்கு செவ்வனே செய்து வந்தேன். பி.இ. படித்த எனக்கு சென்னையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணி கிடைத்துள்ளது. எனவே எனது தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். நான் மக்கள் சேவை பணியை செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது சூழ்நிலை காரணமாக எனது பதவியை ராஜினாமா செய்வது மிகவும் வருத்தமாக உள்ளது என்றார். அப்போது ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகரன் உடன் இருந்தனர்.

Tags

Next Story