உடலை டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்: மலை கிராம மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?

உடலை டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்: மலை கிராம மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
X

உயிரிழந்த பெண்ணின் உடலை டோலி மூலமாக சுமந்து சென்ற அவரது உறவினர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் மலைக் கிராமம் ஒன்றில் சரியான சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவர்களின் உடலை டோலி கட்டித் தூக்கிச் செல்லும் அவலம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், மலைக் கிராமம் ஒன்றில் சரியான சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவர்களின் உடலை டோலி கட்டித் தூக்கிச் செல்லும் அவலம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் உள்ள சீங்காடு மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த பெண்ணின் உடலை டோலி மூலமாக அவரது உறவினர்கள் சுமந்து சென்றனர். சாலை அமைத்து தர மலை கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் டோலி கட்டித் தூக்கிச் செல்லப்பட்டது தொடர்பான செய்திகள் நமது இன்ஸ்டாநியூஸ் செய்தி தளத்தில் 16 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் அதே மலைப் பகுதியில் சீங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமராஜன் என்பவரின் மனைவி சுசீலா என்பவர் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் சாலை வசதி இல்லாததால் மலையடிவாரத்திலேயே நிற்க, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் டோலி கட்டி உடலைத் தூக்கிச் சென்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், கானமலை ஊராட்சியில் உள்ள மலை கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசர சிகிச்சை பெற முடியாமல் மலைவாழ் மக்கள் அவதிப்படுகின்றனர். யாருக்காவது உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்களை மலை கிராமங்களில் இருந்து குறிப்பிட்ட பகுதி வரை டோலி அமைத்து தான் கொண்டு வர வேண்டி உள்ளது.

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு ஆம்புலன்சு கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. கானமலை ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராம மக்கள் சாலை அமைத்து தர கோரி பல்வேறு அரசு அலுவலங்கங்ளில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. எங்கள் பகுதியை அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிடுவதில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் .

எனவே இது குறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கானமலை ஊராட்சியில் உள்ள மலை கிராமங்களுக்கு சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!