/* */

திருவண்ணாமலை அருகே மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது

திருவண்ணாமலை அருகே, ரூ.3 லட்சம் பணத்துக்காக மனைவியை எரித்து கொன்று நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது
X

கொலை செய்யப்பட்ட கவுதமி

திருவண்ணாமலை அடுத்த கஸ்தம்பாடியை சேர்ந்தவர் ராஜா (வயது 32), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கவுதமி (28) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாகவும், மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த கவுதமியின் தாய், தனது மகள் கஷ்டப்படக்கூடாது என்று வெளிநாட்டில் வேலை பார்த்ததில் கிடைத்த ரூ.3 லட்சத்தை கவுதமிக்கு அனுப்பியுள்ளார்.

இதையறிந்த ராஜா, ரூ.3 லட்சத்தையும் தன்னிடமே தர வேண்டும் என்று கேட்டுள்ளார். கவுதமி மறுக்கவே, இருவருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. பின்னர் வெளியில் சென்ற கவுதமி, வீடு திரும்பவில்லை. குடும்பத் தகராறு காரணமாக, மனைவி மாயமாகி விட்டதாக, கணவர் ராஜா தெரிவித்தார்.

இதனிடையே, மாயமான கவுதமி கரும்புத் தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் கிடைத்ததும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கவுதமி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், மனைவியை எரித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 7 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  காயங்களை ஆற்றிக்கொள்ள 'மறதி ஒரு மாமருந்து'..!
 2. லைஃப்ஸ்டைல்
  'அப்பா' எனும் ஆத்மாவை உணருங்கள்..! உங்கள் மூச்சாக இருப்பவர் அவரே..!
 3. ஆன்மீகம்
  நெற்றிக்கண் உடைய சிவனே..! வெற்றியருள்வாய் எமக்கே..!
 4. லைஃப்ஸ்டைல்
  நல்ல நட்பு என்பது ஒரு நூலகம்..! நட்பின் வரிகள்..!
 5. வானிலை
  5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை..!
 6. க்ரைம்
  பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை
 7. உலகம்
  துபாயில் கனமழை : வெள்ளப்பெருக்கில் மூழ்கிய வாகனங்கள்..!
 8. ஈரோடு
  ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரம்
 9. இந்தியா
  தேசிய கீதம் வெறும் வரிகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது நம் தேசத்தின்...
 10. லைஃப்ஸ்டைல்
  Leukemia meaning in Tamil -இரத்தம், எலும்பு மஜ்ஜையை சிதைக்கும்...