/* */

மழைநீர் தேங்கிய பகுதியில் நாற்று நடும் போராட்டம்

திருவண்ணாமலை அருகே சொரகுளத்தூர் கிராமத்தில் மழைநீர் தேங்கிய பகுதியில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மழைநீர் தேங்கிய பகுதியில் நாற்று நடும் போராட்டம்
X

நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட சொரகொளத்தூர் கிராம மக்கள்

திருவண்ணாமலை அருகே உள்ள சொரகுளத்தூர் கிராமத்தில் பாட்டை தெருவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் தெரு முழுவதும் மழைநீர் தேங்கி குளம்போல் சூழ்ந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனினும் வேறு வழியின்றி இந்த பாதையில்நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் மழைநீர் தேங்கி இருப்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அந்த தெருவில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Updated On: 11 Oct 2021 6:19 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  சூரியனை வரவேற்க ஒரு முகவுரை எழுதுவோம், அது 'காலை வணக்கம்'..!
 2. லைஃப்ஸ்டைல்
  காயங்களை ஆற்றிக்கொள்ள 'மறதி ஒரு மாமருந்து'..!
 3. லைஃப்ஸ்டைல்
  'அப்பா' எனும் ஆத்மாவை உணருங்கள்..! உங்கள் மூச்சாக இருப்பவர் அவரே..!
 4. ஆன்மீகம்
  நெற்றிக்கண் உடைய சிவனே..! வெற்றியருள்வாய் எமக்கே..!
 5. லைஃப்ஸ்டைல்
  நல்ல நட்பு என்பது ஒரு நூலகம்..! நட்பின் வரிகள்..!
 6. வானிலை
  5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை..!
 7. க்ரைம்
  பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை
 8. உலகம்
  துபாயில் கனமழை : வெள்ளப்பெருக்கில் மூழ்கிய வாகனங்கள்..!
 9. ஈரோடு
  ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரம்
 10. இந்தியா
  தேசிய கீதம் வெறும் வரிகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது நம் தேசத்தின்...