புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம்!

புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம்!
X

புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம்

புதுப்பாளையம் ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்தினம் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் , வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா ஆகியோர் முன்னிலையில் வைத்தனர். நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், பேசுகையில், 15 ஆவது மானிய நிதி குழு மூலம் செய்யப்பட வேண்டிய பணிகளை இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான செலவினங்கள் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நமது புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெற வேண்டும், வளர்ச்சி பணிகள் நடைபெற்றால் தான் நமது புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் வளர்ச்சி அடையும் .அதனால் நம் புதுப்பாளையம் ஒன்றியத்தை வளர்ச்சியான ஒன்றியமாக மாற்ற வேண்டும்

அதேபோல் வளர்ச்சி பணிகள் அனைத்தும் தரமாகவும் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், ஒன்றிய குழு கூட்டத்தில் கூறினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா உதயசேகரன், ஒன்றிய குழு உறுப்பினர் பொன்னி சுந்தரபாண்டியன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய குழு அலுவலக அலுவலர்கள், கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அலுவலர் ரவி, நன்றி கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!