ஜவ்வாது மலையில் பழங்குடி மக்கள் மாநில மாநாடு: துணை சபாநாயகர் பங்கேற்பு

ஜவ்வாது மலையில் பழங்குடி மக்கள் மாநில மாநாடு: துணை சபாநாயகர் பங்கேற்பு
X

மாநில மாநாட்டில் பங்கேற்ற துணை சபாநாயகர் மற்றும் எம்எல்ஏக்கள்.

ஜவ்வாது மலையில் பழங்குடி மக்கள் மாநில மாநாட்டில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி ஜவ்வாது மலையில் பழங்குடி மக்கள் மாநில மாநாட்டில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள ஜவ்வாது மலையில் பழங்குடி மக்கள் மாநில மாநாடு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் வெங்கடேசன், தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், செங்கம் எம்எல்ஏ கிரி, பழங்குடி மக்கள் துணைத் தலைவர் லீலாவதி , மாநில அமைப்பாளர் ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் கஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசுகையில், திமுக ஆட்சியில் தமிழகம் அதிக அளவு வளர்ச்சி பெற்று திகழ்ந்து வருகிறது.

அதேபோல திமுக ஆட்சியில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல நல்ல திட்டங்களை மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜாதி சான்றிதழ் திமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது.

அதுவும் நமது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்ற மாதம் இங்கு கோடை விழாவுக்கு வந்தபோது வழங்கினார்.

தமிழக அரசு வழங்கும் திட்டங்கள் அனைத்தும் மலைவாழ் மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க வேண்டும் என்பதற்காக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு மற்றும் நானும், சட்டமன்ற உறுப்பினர்களும் முழுமையாக செயல்பட்டு வருகிறோம். ஜவ்வாது மலையை சுற்றுலாத்தலமாக திமுக ஆட்சியில் தான் அறிவிக்கப்பட்டது. ஜவ்வாது மலையில் தற்போது சுற்றுலா மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.

மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இங்கு தொழில் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்கள் மலைப்பகுதிகளில் செல்வதற்கு கடினமாக உள்ளது என்பதால் ஒரு சில இடங்களில் சாலை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, அவர்களும் ,நானும் சட்டமன்ற உறுப்பினர்களும், புதிய சாலைகள் அமைப்பதற்கு வனத்துறை இடம் ஒப்புதல் பெற்று புதிய சாலை அமைப்பதற்கு உண்டான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் சாலைகள் அமைக்கப்படும் என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி மாநில மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் ஜீவா மூர்த்தி, துணை சேர்மன் மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் ,மாநில பொதுச் செயலாளர், இயக்குனர்கள், அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்