கலசப்பாக்கம் மற்றும் ஆரணியில் பாரம்பரிய உணவு விழா
ஆரணியில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா
கலசப்பாக்கம் மற்றும் ஆரணியில் சிறுதானிய உணவுகள் மற்றும் பாரம்பரிய உணவு விழா நடைபெற்றது
கலசபாக்கம் ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளில் உள்ள மகளிர் திட்டத்தின் மூலம் சிறு தானிய உணவுகள் மற்றும் பாரம்பரியமான உணவு விழா பிரச்சாரத்தை வட்டார இயக்க மேலாளர் ராஜேந்திரன், தொடங்கி வைத்து பேசியதாவது,
நமது மகளிர் திட்டத்தின் மூலம் நம் அனைவரும் அன்றாட பயன்படுத்தும் உணவுகள் பாரம்பரியமான உணவாக இருக்க வேண்டும், அதுவும் குறிப்பாக சிறுதானிய உணவுகள் அதிக அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறுதானியத்தின் மூலம் நம் உடலில் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்றவைகளை போக்குவதற்கு நாம் சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் நம் பாரம்பரிய உணவான கீரை வகைகள் கேழ்வரகு உணவுகள் சிறுதானியங்கள் சாமை, திணை, குதிரைவாலி, சோளம், கம்பு, சீரக சம்பா போன்ற சிறுதானிய உணவுகளை நம் அருந்த வேண்டும். அதிலும் குறிப்பாக உணவில் கட்டாயம் கீரை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நம் அனைவரும் மகளிர் திட்டத்தின் மூலம் மக்களுக்கு தெளிவான முறையில் எடுத்துக் கூற வேண்டும். மேலும் அத்துடன் இந்த மகளிர் திட்டத்தின் மூலம் பாரம்பரியமான உ ணவு விழாவில் சிறுதானிய உணவுகள் பாரம்பரிய உணவுகள் நம் அருந்த வேண்டும் என்று வட்டார இயக்க மேலாளர் ராஜேந்திரன், இவ்வாறு கூறினார்.
சிறுதானிய உணவுகள் மற்றும் பாரம்பரிய உணவு விழா பிரச்சாரத்தில் அனைத்து வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் பங்கேற்று சிறுதானியங்களில் செய்யப்பட்ட உணவுகளை வழங்கினர்.
ஆரணியில் பாரம்பரிய உணவுத் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவில், ஆரணி பகுதி கிராமங்களைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிா் தயாா் செய்த சிறுதானிய பாரம்பரிய உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கட்ராமன், ராஜேஸ்வரி மற்றும் நடுவா்கள் உணவு வகைகளை பாா்வையிட்டு சிறந்த படைப்புகளை தோ்வு செய்தனா்.
சேவூா் கிராமத்தைச் சோ்ந்த செம்பருத்தி, சாய்பாபா, முருகன் துணை மகளிா் குழுக்கள் தயாரித்த உணவு வகைகள் முதல் பரிசை பெற்றது. சித்தேரி கிராமத்தைச் சோ்ந்த தீபம், அத்திப்பூ, மல்லி மகளிா் குழுக்கள் தயாரித்த உணவு வகைகள் இரண்டாம் பரிசையும், இராட்டிணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த செல்வவிநாயகா், இதயக்கனி மகளிா் குழுவினா் மூன்றாவது பரிசையும் பெற்றனா்.
இதில் வட்டார இயக்க மேலாளா் முருகன், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் கோட்டீஸ்வரி, தேன்மொழி, ஆனந்தி,சிவகாமி, லட்சுமி, ரேகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், பாா்வையாளா்கள் சிறுதானிய உணவுகளை ருசித்துப் பாா்த்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu