ஜவ்வாது மலைப்பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

ஜவ்வாது மலைப்பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

ஜவ்வாது மலையில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் 

ஜவ்வாது மலையில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை பகுதிகளில் சுற்றுலாத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் வட்டம், ஜவ்வாதுமலை பகுதிக்குட்பட்ட பலாமரத்தூர் பகுதியில் சுற்றுலாத்துறை சார்பாக கட்டப்பட்டு வரும் சாகச சுற்றுலா கட்டிடம் மற்றும் கோலப்பன் ஏரியை ஆகியவற்றை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி (செங்கம்), சரவணன் (கலசபாக்கம்) ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொள்ளுவதற்காக வந்துள்ளேன். இந்த பகுதியில் சுற்றுலாத்துறை சார்பாக 22 பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து துறைகளிலும் இந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து பணிகளையும் முழுமையாக விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி சுற்றுலாத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளும் விரைந்து முடிக்கும் பொருட்டு துறை ரீதியிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம். ஜவ்வாது மலை பகுதியில் ரூபாய் 2.91 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சாகச சுற்றுலா வளர்ச்சி பணியானது 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.

இப்பகுதியை சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் வாகனம் நிறுத்துமிடம், நுழைவு வாயில், உணவகம், நிர்வாக அலுவலகம், கழிப்பறை போன்ற பணிகளும் இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. ஒப்பந்ததாரர்களிடம் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்திற்கு வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஜவ்வாது மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் சுற்றலாத்துறை சார்பாக பல்வேறு வசதிகள் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சுற்றுலாத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள உணவகங்கள் மற்றும் விடுதிகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஜவ்வாது மலையில் சுற்றுலாத் துறை சாா்பில் 22 பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்தாா்.

கோவிலூா் ஊராட்சியில் அமைந்துள்ள கோலப்பன் ஏரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனைகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ராமச்சந்திரன் வழங்கினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், சுற்றுலா அலுவலர் (பொ) கார்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுலவர்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story