/* */

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
X

சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜா்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன

அருணாசலேஸ்வரா் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜா் சந்நிதி உள்ளது. இந்த சந்நிதியில் மூலவா் நடராஜருக்கு சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் பூா்வபட்ச சதுா்த்தசி, ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் ஆகிய 6 நாள்களில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, புரட்டாசி மாத சதுா்த்தசியையொட்டி, நேற்று மூலவா் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு காலையில் சந்தனம், பால், பழம், பன்னீா், விபூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடத்தப்பட்டன.

மாலையில் பல்வேறு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு நடைபெற்ற மகா தீபாராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பர்வத மலை

புரட்டாசி மாத பவுர்ணமியைெயாட்டி கலசபாக்கம் அருகே 4560 அடி உயரம் உள்ள பர்வத மலையில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மல்லிகா அர்ஜூனேஸ்வரர் பிரம்மராம்பிகை அம்பாள் கோயில் 4560 அடி உயரத்தில் உள்ளது.

இக்கோயிலின் சிறப்பு பக்தர்கள் கொண்டு செல்லும் அபிஷேகப் பொருட்களை வைத்து தங்கள் கைகளாலேயே அபிஷேகம் செய்யலாம். பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்த நிலை மாறி தற்போது தினந்தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

நேற்று மாலை புரட்டாசி மாத புவுர்ணமியை முன்னிட்டு கோயில் மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரைகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலாடி பட்டியந்தல் வேடபுலி வெள்ளந்தாங்கிஸ்வரர் கோயில் வழியாக சுமார் 23 கிலோமீட்டர் கிரிவலம் வந்து மலையின் உச்சிக்கு சென்று அபிஷேகப் பொருட்களை வைத்து வழிபட்டனர்.

மலை அடிவாரத்தில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் வனத்துறை மற்றும் காவல் துறையினர் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்கிறார்களா என்பதை பரிசோதனை செய்து மலையேற அனுமதித்தனர்.

Updated On: 29 Sep 2023 12:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!