செய்யாற்றின் குறுக்கே மூன்று புதிய மேம்பாலங்கள்: அமைச்சர் அடிக்கல்
மேம்பால பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் வேலு.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த பூண்டி ஊராட்சியில் செய்யாற்றின் குறுக்கே 3 உயா்மட்ட பாலங்கள் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
செய்யாற்றின் குறுக்கே ரூ.19 கோடியே 92 லட்சத்தில் பூண்டி-பழங்கோவில் வரையும், ரூ.20 கோடியே 91லட்சத்தில் கீழ்பொத்தரை-பூவாம்பட்டு வரையும், ரூ.15 கோடியே 5 லட்சத்தில் கீழ்தாமரைப்பாக்கம்-தென்மகாதேவமங்கலம் வரையும் உயா்மட்ட பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்தப் பாலப்பணிகளுக்கான தொடக்க விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் முருகேஷ், தலைமை வகித்தாா்.
தலைமைப் பொறியாளா் முருகேசன், கண்காணிப்பு பொறியாளா்கள் தேவராஜ், பழனிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா், ஒன்றியக்குழுத் தலைவா் அன்பரசி ராஜசேகா் வரவேற்றாா்.
பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பணியை பூஜைசெய்து பணியினை தொடங்கி வைத்து அமைச்சர் பேசியதாவது
கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள செய்யாற்றின் குறுக்கே மூன்று மேம்பாலங்கள் அமைப்பதற்கு நபார்டு வங்கி கடன் உதவி திட்டத்தின் மூலம் மூன்று மேம்பாலங்கள் அமைப்பதற்கு அரசாணை பெற்று பாலங்கள் அமைக்கும் பணியை இப்போது துவக்கி வைத்துள்ளோம்.
செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் வேண்டும் என்று சுமார் 25 ஆண்டு காலமாக அப்பகுதி மக்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் மேம்பாலம் கட்டுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேம்பாலம் கட்டுவதாக கூறி பலமுறை கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து பூஜை செய்வதாக கூறி செய்து வந்தார்கள். தவிர யாரும் மேம்பாலம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. மேம்பாலம் கட்டுவதற்கு பூமி பூஜையும் செய்து பணியை துவங்கவில்லை,
ஆனால் திமுக ஆட்சியில் இதற்கு முன்பு கலசபாக்கத்தில் உள்ள திருவண்ணாமலை முதல் வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலசப்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகாமையில் உள்ள மேம்பாலம் 1996 ஆம் ஆண்டு கலசபாக்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவேங்கடம் அவர்கள் , கலைஞர் முதல்வராக இருந்தபோது அவரிடம் கலசப்பாக்கம் தொகுதிக்கு மேம்பாலங்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார். அப்போது முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் உத்தரவின் படி கலசப்பாக்கத்தில் உள்ள செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டது.
அதன் பிறகு சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்த மேம்பாலம் கட்டுவதற்கு முன்வரவில்லை. அதன் பணிகளும் எதையும் செய்யவில்லை .ஆனால் திமுக ஆட்சி வந்தா மட்டும்தான் இந்த மேம்பாலம் கட்டுவதற்கு உண்டான பணிகளும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
அதனால்தான் திமுக ஆட்சி மக்களாட்சி என்று புகழப்படுகிறது.
தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக உள்ள சரவணன் அவர்கள் முழுமூச்சால் என்னிடமும் முதலமைச்சர் அவர்களிடமும் அயராமல் கேட்ட கோரிக்கையால் இந்த செயலாற்றின் குறுக்கே மூன்று மேம்பாலங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலங்கள் மூலம் சுமார் 26 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முழுமையாக பயனடைவர்.
மேலும் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நபார்டு வங்கியின் கடன் உதவி மூலம் ஐந்து தலை பாலங்கள் உயர்மட்ட பாலங்கள் கட்ட 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசாணை பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் கலசப்பாக்கம் தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாக உள்ளது, விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பியுள்ள ஒரு தொகுதியாகும்.
சரவணன் எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பிறகு கலசப்பாக்கம் தொகுதி வளர்ச்சியான தொகுதியாக மாற்றப்பட்டு வருகிறது. இன்னும் பல வளர்ச்சிக்கான தகுதியாக மாற்றுவதற்கு இந்த தமிழக அரசு வழங்கும் திட்டங்கள் அதிகளவு கலசபாக்கம் தொகுதிக்கு தான் முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அமைச்சர் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் சரவணன் (கலசப்பாக்கம்), கிரி(செங்கம்), ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu